9 ஆடம்பர கார்கள்: மாளிகை போல் வீடு: தூய்மைப் பணியாளராக பணிபுரியும் கோடீஸ்வரர்: சிக்கியது எப்படி…!!

Author: Sudha
17 ஆகஸ்ட் 2024, 4:08 மணி
Quick Share

உத்திரபிரதேசம் கோல்கோண்டா மாவட்டத்தில் நகர் கோட்வாலி பகுதியில் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக இருப்பவர் சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால்.

அவர் பணியாற்றும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகள் அடிக்கடி மாயமாகி விடுவதாகவும், அதில் உள்ள அரசு தகவல்கள் கசிய விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு காணாமல் போகும் அரசாங்க பைல்களில் உள்ள தகவல்களை திருத்தி சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால் ஏராளமான சொத்துகள் குவித்துள்ளார், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கமிஷனர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவுக்கு புகார்கள் வந்தது.இதையடுத்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது புகாருக்கு ஆளான சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் சொத்துகளே அதற்குக் காரணம். மொத்தம் அவர் 9 சொகுசு கார்களை வைத்துள்ளார். இதுதவிர, சொகுசான, நவீன வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வீடுகளும் அவருக்கு உள்ளன. அவர் வைத்துள்ள சொகுசு கார்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

5 ஆண்டுகளில் அவரின் வங்கிக் கணக்கில் நடந்த பணப்பரிமாற்றம் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.உரிய விசாரணைக்கு பின்னரே அவருக்கான சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும்.

விசாரணைகளின் முடிவில் தூய்மைப் பணியாளர் ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 191

    0

    0