வெறும் கையால் சாக்கடையை அள்ளச் சொன்னாரா திமுக எம்எல்ஏ..? வைரலாகும் வீடியோ… நடவடிக்கை பாயுமா..? பாஜக கேள்வி!

Author: Babu Lakshmanan
4 January 2023, 4:19 pm

திமுக எம்எல்ஏ கண்முன்னே வெறும் கையால் சாக்கடையை நபர் ஒருவர் அள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எபினேசர். தண்டையார் நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள தெருவொன்றில் ஆழ்குழாயில் தண்ணீர் செல்ல முடியாமல், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ எபினேசர், அங்கு சாக்கடையாக கிடந்ததை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்த அவர், மாநகராட்சி ஊழியர் ஒருவரை வரவழைத்து சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தனர். அந்த ஊழியரும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் முழங்கை அளவு கையை உள்ளே விட்டு கழிவுகளை வெளியே அள்ளி வீசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் மாநகராட்சி ஊழியரை சாக்கடையை அள்ளுவதற்கு எம்எல்ஏ எப்படி அனுமதித்தார் என்ற கேள்வியும், கண்டனமும் எழுந்து வருகிறது.

இது பற்றி தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது :- சமூக அவலத்திற்கு துணை போகும் எம்எல்ஏ. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் எப்போதும் இந்த நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா? சமூக நீதி காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களின் சமூகநீதி! இந்த எம்எல்ஏ மீது நடவடிக்கை பாயுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 468

    0

    0