குப்பையில் கிடந்த 6 சவரன் நகைமீட்டுக் கொடுத்த தூய உள்ளம்; தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு

Author: Sudha
26 July 2024, 4:39 pm
Quick Share

கோவையில் குப்பையில் கிடந்த 6 பவுன் நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவையை அடுத்த கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சிவகாமி.இவரது கணவர் இறந்துவிட்டார். 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு கவறில் போட்டு வீட்டில் வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை போட்டு வைத்திருந்த கவரை அவர் தவறுதலாக குப்பையில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தார்.‌ பின்னர் சிறிது நேரத்தில் அவர் தனது நகையை தேடி பார்த்தார். அப்போதுதான் அவருக்கு குப்பையில் நகையை போட்டது தெரிய வந்தது.‌

பின்னர் அவர் 98-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் உதவியுடன் நகையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் லாரியில் சேகரித்த 1½ டன் குப்பையை கீழே கொட்டி தங்க நகையை கண்டுபிடித்து சிவகாமியிடம் ஒப்படைத்தனர்.

குப்பையில் போட்ட நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 185

    0

    0