பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 ஏப்ரல் 2024, 4:47 மணி
CM Stalin
Quick Share

பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு.

பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பாஜக ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: இந்த தேர்தல் இரண்டாம் சுதந்திர போர்.. Modi, Amit shahவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் : திருமா வாக்கு சேகரிப்பு!!

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

எனவே, மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 217

    0

    0