ஆளுநர் மாளிகைக்கு செல்லும் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்? அண்ணாமலை எடுத்த முடிவு.. கலக்கத்தில் அண்ணா அறிவாலயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 2:51 pm
Quick Share

கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக தலைவா் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளாா்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பெயர் நீக்கப்பட்டு நியூட்ரிஷன் கிட் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து திட்டத்திற்காக 23.88 லட்சம் கிட்களை அரசு கொள்முதல் செய்கிறது.

ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதம் சிலரது நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கப்பட்டு தனியார் நிறுவனத்தின் மிக்ஸ் சேர்க்கப்பட்டது.

ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜீ-ஸ்கொயர் நிறுவனத்தின் வளர்ச்சி கழகமாக சிம்டிஏ மாறியுள்ளது.

இந்த நிறுவனம் நிலம் அப்ரூவலுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் ஆன்லைன் லிங்க் செயல்பாட்டில் உள்ளது. பிறகு செயல்படாமல் போகிறது. இந்த நிறுவனம் 15 திட்டங்களை செய்து முடித்துள்ளது.

புதிதாக 6 நிறுவனங்களை ஜீ-ஸ்கொயர் நிறுவனம் வாங்கியுள்ளது. கட்டுமான திட்டங்கள் ஜீ-ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார் கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது” என்றார்.

இந்த நிலையில் அண்ணாமலை கூறியுள்ள புகார் ஊழல் தடுப்பு & லஞ்ச ஒழிப்புத்துறையில் அளிப்பார்கள். அங்கு நடவடிக்கை இல்லை என்றால் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 614

    0

    0