பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு சிறை… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு… மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 12:40 pm

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அனுமதியின்றி சுமார் 50 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை கற்களை எறிந்து உடைத்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. மேலும், வாகனத்தின் கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், கானாத்தூர் தனிப்படை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை மேலும் 3 வழக்குகளில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பேனரை சேதப்படுத்திய வழக்கிலும், நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கிலும், தென்காசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளிலும் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்றொரு வழக்கில் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 418

    0

    0