அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி திடீர் பாராட்டு.. கொண்டாடும் பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 8:52 pm

பாஸ்போர்ட் விவகார வழக்கில் மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியதாவது: பாஸ்போர்ட் விவகாரத்தை மீண்டும் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இருக்காது. பாஸ்போர்ட் விசயத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

பாஸ் போர்ட் மோசடி தொடர்பான விவகாரத்தில் அப்போது மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் குற்றமற்றவர் என நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக சுரேஷ்குமார் என்பவர் தனது மீதான பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கும்படி வழக்கை முடித்து வைக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: நசரூதீன் என்பவர் உடனான தொடர்பு குறித்து அவர் கூறுகையில் நசரூதீன் என்பவர் பயண முகவர் மட்டுமே.தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என கூறினார். வழக்கை பொறுத்தவரையில் மனுதாரர் மீது குற்றம் இல்லாததால் அவருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்