கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகளை நிறுத்த முடிவு : இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 1:31 pm

கொரோனா தடுப்பூசிகளில் பிரதானமாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது உலகளவில் பெரும் சர்ச்சையானது.

இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இதே ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து குறித்து முக்கிய தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் DCGI தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கேன்சர் நோயாளிகளின் கீமோதெரபி சிகிச்சைக்கு அளிக்கும் ஓலாபாரிப் (Olaparib) மருந்தை DCGI ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளை அடுத்து, தற்போது மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை திரும்ப பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிப்பட்டுள்ளது.

மே 16 அன்று DCGI குழுமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பிய தகவலின்படி, அஸ்ட்ராஜெனெகா ஃபார்மா இந்தியா லிமிடெட் நிறுவனம், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்ற சில புற்றுநோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படும் ஓலாபாரிப் (Olaparib)100மிகி மற்றும் 150மிகி மாத்திரைகளை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தும், குறிப்பிட்ட கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி பல்வேறு கட்ட சிகிச்சையில் ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை தொடர்ந்து அளிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, விரைவாக, ஓலாபாரிப் (Olaparib) 100mg மற்றும் 150mg மாத்திரைகளை சந்தைப்படுத்துதலை திரும்பப்பெற வேண்டும் என அனைத்து உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தி DCGI சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க: கடவுள் நம்பிக்கை இல்லாத போது கோவில் நிர்வாகம் மட்டும் எதுக்கு..? திமுகவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

இந்த ஓலாபாரிப் (Olaparib) 100 mg மற்றும் 150 mg மாத்திரைகள் கடந்த ஆகஸ்ட் 13, 2018 அன்று கருப்பை புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக DCGI ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 308

    0

    0