கோழை ராகுல்காந்தியே.. புறமுதுகிட்டு ஓடியது நினைவில்லையா? ட்விட்டரில் பாஜக துணைத் தலைவர் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 8:26 pm

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை அளித்த நிலையில், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மன்னிப்பு கேட்க போவதில்லை, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, கோழை ராகுல் காந்தியே! குற்றவாளியே.

ரஃபேல் விவகாரத்தில் பொய் பேசியதற்கு உச்சநீதி மன்றத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது மறந்து விட்டதா? அதே உச்சநீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டு புறமுதுகிட்டு ஓடியது நினைவில் இல்லையா? மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பா? என கொந்தளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி