எங்களுக்கு மதுரை தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் கிடையாது… அமைச்சரால் தொண்டர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 7:34 pm

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் வெங்கடேசனை வேட்பாளராக நான் பார்க்கவில்லை என்றும், முதல்வர் அவர்களை தான் வேட்பாளராக மனதில் எண்ணி பணியாற்றி வருவதாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 2வது முறையாக திமுக கூட்டணியில் போட்டியிடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிடிஆர் அவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று மதுரை வடக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்களே தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், ஒத்தக்கடை பகுதியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அப்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அவர் பேசும் போது ;- இன்று நம்முடைய அருமை சகோதரர் சு வெங்கடேசன் வெற்றி பெறுவார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கிறார் என்பதுதான் முக்கியம். அதில் ஒத்தக்கடையை பொருத்தமட்டில் எனக்கு கூட வாக்குகள் கம்மியாக தான் பதிவாகி இருந்தது.

ஆனால், வெங்கடேசனுக்கு சென்ற ஆண்டு அதிக வாக்குகள் அளித்தார்கள். குறிப்பாக, பிரசிடெண்ட் தேர்தல் தற்போது வரப்போவதில்லை. அதனால் அதற்கு யாரும் தற்போது பணி செய்ய வேண்டாம். நாங்கள் கூறிய பிறகு பணி செய்யலாம். தற்போது நமது வாக்கு விகிதத்தை உயர்த்தக்கூடிய வகையில் நீங்கள் பணி செய்ய வேண்டும், என்றார்,

நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய வாக்கு சதவீதத்தை உயர்த்தி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நமது கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ஒத்தக்கடை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 75 சதவீதம் முழுவதுமாக இந்த பகுதியில் நிறைவு பெற்றிருக்கிறது. விரைவில் 100% நிறைவு பெறும்.

அதேபோன்று, மாநகராட்சியை ஒட்டி இருக்கக்கூடிய பஞ்சாயத்து பகுதியாக இருந்து வரக்கூடிய வேளையில், கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நிதி பெற்று 10 பஞ்சாயத்து பகுதிகளிலும் இந்த கழிவுநீர் பிரச்சனையை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இந்த பணிகள் நடைபெற உள்ள நிலையில், துறை ரீதியான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றவுடன் பணிகள் துரிதப்படுத்தப்படும். ஒத்தக்கடை பகுதியை மிகப்பெரிய நகரமாக காண்பிப்பதை எனது எண்ணம்.

பிற பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளாக பணிகள் நடைபெற்று வந்தது. எல்லா ஊராட்சிகளிலும் 90% உயர் மட்ட தொட்டிகள் அமைப்பதற்கான ஆணை புறப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிழக்கு ஒன்றியத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது.75% சாலை பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அடுத்த ஓராண்டிற்குள் 100% பணிகள் நடைபெற்ற வரும்.

வரும் 14ஆம் தேதி டெண்டர் விடப்படக்கூடிய நிலையில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவுபெறும், என்றார். ஓராண்டு காலகட்டத்திற்குள் ஒரு தன்னிறைவு பெற்ற ஒரு பகுதியாக இந்த ஒத்தக்கடை பகுதி திகழும். இரண்டாவது முறையாக எனக்கு வாக்களித்து அமைச்சர் பதவி வழங்கிய உங்களுக்கு நிச்சயம், அனைத்து பணிகளையும் செவ்வனே நான் செய்வேன்.

சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, அன்று இருந்த போட்டியில் எனக்கு ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்தீர்கள். 1600 வாக்குகள் ஒத்தக்கடையில் எனக்கு வந்த நிலையில் வெங்கடேசனுக்கு 2500 வாக்குகள் அன்று மக்கள் வாக்களித்தீர்கள். நிச்சயமாக சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட ஒத்தக்கடையில் இந்த தேர்தலில் அதிகமான வாக்குகளை பெற உள்ளார்கள்.

மிகப்பெரிய இந்த தேர்தலில் வேட்பாளர் வெங்கடேசன் என்பதை நான் பார்க்கவில்லை. முதல்வர்தான் வேட்பாளர் என்று எண்ணி தளபதி தான் வேட்பாளர் என்றதை மனதில் நினைத்து தான் தேர்தல் பணியாற்றி வருகிறோம். முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை செய்வதுதான் நமது கடமை உரிமை. நாடாளுமன்ற வேட்பாளருக்கு தேவைப்படக்கூடிய அனைத்து தேர்தல் பணிகளுக்கும் நாம் செய்ய உள்ளோம்.

ஒரு குறையும் இல்லாமல் நாம் பணி செய்ய உள்ளோம். கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இதுதான் அலுவலக திகழப்போகிறது. நமது கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் ஒன்பதாம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கும் சேர்த்து நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யக்கூடிய கூட்டம் மற்றும் ஆதரவாக வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசக்கூடிய கூட்டம் இருந்தாலும் எப்போதுமே மதுரையில் தான் முதல் இடம் பெறும். அதேபோன்று, இந்த முறையும் மதுரையில் நடைபெறக்கூடிய தலைவர் கூட்டத்தில் அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நண்பர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று நிறைவு செய்கிறேன், நன்றி வணக்கம், என்று தனது பேச்சை நிறைவு செய்தார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 344

    0

    0