பாஜகவால் கொள்கையை மாற்றிய கம்யூனிஸ்ட்.. கோவில் திருவிழாக்களில் பங்கேற்க திட்டம் : கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு,.!!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 3:59 pm

பண்பாட்டு களத்திலும் பாஜகவை எதிர்க்க கோவில் விழாக்களில் மார்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம் என்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- 23வது மாநில மாநாடு வருகிற மார்ச் 30,31, ஏப்ரல் 1ஆம் தேதி மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. மத்திய அரசு கற்பனைக்கு எட்டாத வகையில் ஆபத்தான விதத்தில் பயணித்து வருகிறது. ஒற்றை கலாச்சாரம், மொழி, கூட்டாட்சி தத்துவம், கல்வி உள்ளிட்டவைகளை ஒன்றிய அரசே நிர்ணயிக்கும் என்ற நிலைபாடு கொண்டு செயல்படுகிறது.

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கபடகூடாது. உயர்கல்வி கொள்கையை வேந்தர்கள் பெயரில் கல்வியை ஒற்றை ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலுக்கிறது. ஒற்றை தன்மையை திணிக்கும் விதத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தில் போர் புரியும் சூழல் ஏற்படும். சாதாரண பிரச்சனைகளை மத கலவரமாக மாற்றி தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்து பாஜக முயற்சி செய்கிறது.

பண்பாட்டு தளத்திலும் பாஜகவை எதிர்ப்பது குறித்தும் இந்த மாநில மாநாட்டில் விவாதிக்க பட உள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையால் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் பணி நிரந்தரம் கேள்வி குறியாக உள்ளது, சம்பளம் குறைப்பு தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. இதனை கண்டித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

உத்திரபிரதேச தேர்தல் அறிவித்த நாள் முதலே 4 மாதத்திற்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்யாமலே இருந்து விட்டு தற்போது, 4 மாதத்திற்கு சேர்த்து விலை ஏற்றி உள்ளனர். ரஷியா – உக்ரேன் போர் காரணமாக ஆயில் விற்பனை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்தபோதிலும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விருதுநகரில் பாலியல் வன்புணர்வு சம்பவம் நேற்றைய தினம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். காதலர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இளம் காதலர்களை பாதுகாக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தை தவிர்க்க வேண்டும். காதலர்களுக்கு பாதுகாப்பு மார்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

கருத்தியல் ரீதியாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதை போன்று கோவில் விழாக்களில் மார்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ப்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம். கோவில் விழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடிகளை நடுவது மத உணர்வை தூண்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதசார்பற்று முறையில் அனைத்து மதத்தினரும் அனைத்து கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று வழிபடுகின்றனர். அவர்களை பாதுக்காப்பதும் நமது கடமை தான்.

எனவே மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி இனி கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும். இலங்கை பொருளாதார வீழ்ச்சியை போன்று நாளை இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி நடைபெறும். சூழலுக்கு ஏற்ப எந்த கட்சியும் முடிவெடுக்கும், கோவில் நிகழ்ச்சியை மத வெறியாக மாற்ற நினைப்பவர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாக்குகளுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, மாறாக கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவசியம் உள்ளது, எனக் குறிப்பிட்டார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!