‘I.N.D.I.A’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது எதிர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 28 கட்சிகள் I.N.D.I.A. என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணியின் இரு ஒருங்கிணைப்பு கூட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில், I.N.D.I.A. கூட்டணியை வழிநடத்தவும், தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் குழு அமைக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொலிட் பீரோ எனப்படும் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், I.N.D.I.A. கூட்டணியின் அங்கமாக தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை புரிதல் இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என்றும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் அல்லது சிவசேனாவுடன் தாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் நெருங்க நெருங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.