இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனா லாக் டவுன் சமயத்தில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது.ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடாஷா ஸ்டான்கோவிக், தமிழில் விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் பல்வேறு விளம்பரங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்.
பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவரும் சில மாதங்கள் நட்பில் இருந்து, பின்னர் காதலர்களாக மாறினர். இதன்பின் இருவரும் “Living Together” உறவில் இருந்த போது, நடாஷா கர்ப்பமானார். அதன்பின் இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு அகஸ்தியா எனப் பெயரிட்டனர்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இருவரும் தனது மகன் அகஸ்தியா முன்பாக மீண்டும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.
ஹர்திக் பாண்ட்யா – நடாஷா இடையிலான உறவு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரியவுள்ளதாக தகவல் பரவியது.இந்த செய்தியை இருவரது தரப்பும் உறுதி செய்யாத நிலையில், ஹர்திக் பாண்டியா பல முக்கிய நிகழ்வுகளில் குறிப்பாக அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் தனியாக கலந்து கொண்டார்.
சாதாரண நிகழ்ச்சிகளில் கூட மனைவியுடன் ஹர்திக் பாண்டியா பங்கேற்ற நிலையில் இந்த மாற்றம் பல யூகத்திற்கு வழி வகுத்தது. இந்த நிலையில் மனைவி நடாஷாவை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிவதற்கு முடிவு செய்துள்ளோம். இருவரின் நலனுக்கும் இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். குடும்பத்துடன் மகிழ்ச்சியுடனும், பரஸ்பரம் மரியாதையுடனும் இருந்த எங்களுக்கு இது மிகக் கடினமான முடிவு.
எங்கள் மகன் அகஸ்தியா என்னுடனும் நடாஷா உடனும் இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளோம். இந்த கடினமான தருணத்தில் எங்களது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.