இந்திய கிரிக்கெட் அணியில் புறக்கணிப்பு; தமிழக வீரர் நடராஜன் விளக்கம்,,,!!

Author: Sudha
27 July 2024, 10:09 am

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசி இந்திய அணியில் இடம் பிடித்தார்இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் துல்லியமாக பந்து வீசி மேக்ஸ்வெல் டிவிலியர்ஸ் போன்றோரையும் திணறடித்தார்.

காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 14வது தொடரில் இவர் பங்கேற்கவில்லை

சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடராஜன் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு நான் முதன் முதலில் செல்லும்போது தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. அங்கு முழுவதுமாக ஹிந்திதான். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி தனியாக இருப்பதைப்போல் உணர்ந்தேன். அதனால் தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும் என்பதால் கஷ்டங்களைத் தாண்டி விளையாடுவேன் என்று பேசினார்.அவரது ஹிந்தி பற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய அணியில் இவருக்கான சிறப்பான இடம் வழங்கப்படவில்லை என்பது போன்ற தகவல்கள் பரவி வந்தது.இதைக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் எனக்கு ஏற்பட்ட சில காயங்களால் என்னால் அணியில் விளையாட முடியவில்லை, எனக்கான வாய்ப்பு பிசிசிஐ ஆல் மறுக்கப்பட்டது எனச் சொல்வது தவறானது என்றார். மேலும் ஹிந்தி பற்றிய அவரின் பேச்சு குறித்து கேட்ட போது என்னுடைய வாழ்வில் நான் கடந்து வந்த பாதையைப் பற்றி மட்டுமே பேசினேன் என்று பதில் அளித்தார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 228

    0

    0