நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 6:33 pm

நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST!

4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளனர்.

சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர். அந்த 350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை தொடர்ங்கியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்படாலம் எனக் கூறப்படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!