சி எஸ் ஐ கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்: ஒரு ஹசீனாவோ, ஹேமாவோ பணிக்கு பரிசீலிக்கப் படுவார்களா? நீதிமன்றம் கேள்வி….!!

Author: Sudha
11 August 2024, 8:39 am

மனோகர் தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் திருநெல்வேலி சிஎஸ்ஐ மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிடும் போது சிஎஸ்ஐ திருச்சபை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் சபை.இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு. துவக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. அவை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் சம்பள செலவுகளை அரசிடம் இருந்து மானியமாக பெறுகின்றனர்.

மாநில அரசின் நிதி உதவி பெறுவதற்கான உரிமையுடன், சிறந்த, திறமையான ஆசிரியர்களை நியமிக்கும் கடமையும் உள்ளது.மறைமாவட்ட பதிவு மூப்பு பட்டியலிலிருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.இது மறைமாவட்டக் கொள்கை எனில், அது நிச்சயமாக நல்ல நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது.

ஜாதி, மதம் மற்றும் மத பின்னணியை பொருட்படுத்தாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலியிடங்களை முறையாக அறிவிக்க வேண்டும்.

பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். பணி நியமன நடவடிக்கைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோர் எவ்வாறு தேர்வு நடந்தது என்பதை அறிய வழிவகை செய்ய வேண்டும்.நியமனத்திற்கு ஹசீனா மற்றும் ஹேமா கூட பரிசீலிக்கப்பட மாட்டார்கள். நியமனத்தின் முழு நடைமுறையும் அரசியலமைப்பிற்கு முரணானது; பாரபட்சமானது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!