கடலூர் : பண்ருட்டி அருகே திருமண விழாவில் நடனமாடிய போது கேள்வி கேட்டதால், கோபத்தில் முறை மாமனை மணந்த மணமகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரைச்சேர்ந்த ஸ்ரீதருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது. அதன்பேரில்
நேற்று முன்திளம் காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் விட்டார்கள் ஏற்பாடு செய்திருந்தன. இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் அனைவரும் டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மணமகள் விட்டார்கள்
மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார்.
மணமகள் மற்றும் மணமகள் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக ஆண்களுடன் நடனம் ஆடியபோது, உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதால், மணமகன் உடனடியாக மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த நபரை பளார் விட்டுள்ளார் மாப்பிள்ளை. இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறினார்
உடனே மணப்பெண்ணுக்கும் முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து மணமகன் ஸ்ரீதர், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து திருமண மண்டபத்தில் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னையும் ஜெய்சந்தியாவையும் நடனம் ஆடச் சொல்லி பெண் வீட்டு உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஆட வைத்தனர். மேலும் பெண் வீட்டு உறவினர் மணப்பெண்ணின் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஏன் இது போல் நடந்து கொள்கிறாய் என்று கேட்டதற்கு திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அன்றே வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் நானும் எனது குடும்பமும் உறவினர்களும் மனவேதனை அடைந்து உள்ளோம். திருமணம் நிச்சயதார்த்தம் முதல்
திருமணம் வரை எங்களுக்கு ரூபாய் 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் மணமகள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.