வணிக சிலிண்டர் விலை திடீர் குறைப்பு.. எதிர்பாரா ட்விஸ்ட் : வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan22 December 2023, 8:43 am
சிலிண்டர் விலை குறைந்தது.. இல்லத்தரசிகளுக்கு எதிர்பாரா ட்விஸ்ட் : வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில்தான் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அப்படி இருக்க, இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக காலையிலேயே மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இன்னும் சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.