உச்ச நடிகரின் உயிருக்கு ஆபத்து? உளவுத்துறை வார்னிங் : Y+ பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு!!
பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் வெளியான ஜவான், பதான் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மகாராஷ்டிராவின் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
மேலும் இந்தியா முழுவதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவரது வீட்டிற்கு 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.
இந்தியாவில் ஆயுதம் ஏந்திய தனியார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமீப காலமாக ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.