பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 23 வயது மதிக்கத்தக்க இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவரின் பாதி சிதைந்த உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாகப் மீட்டனர், இறந்தவரின் தாயையும் மீட்டனர், அவர் தன் மகன் இறந்தது தெரியாமல் தனது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து வந்துள்ளார்.அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது.
அந்த பெண்மணி ஆர்டர் செய்த ஜூஸை டெலிவரி செய்ய அபார்ட்மெண்டிற்குச் சென்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தந்தார்.
போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை உடைத்து பார்த்த போது அந்தப் பெண், படுக்கையறையில் தனது மகனின் இறந்த உடலை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை வழக்கம் போல கவனித்து வந்துள்ளார்.
இறந்த வாலிபர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் உமா உடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது தந்தை பூடானில் பணிபுரிந்து வருகிறார்.
விசாரணையில், விஷ்ணு தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில். இன்டர்ன்ஷிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் கடுமையான எடை இழப்பு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என சொல்லப் படுகிறது.
கவலையடைந்த அவரது நண்பர்கள் கடந்த வாரம் அவரைப் பார்க்க வந்தபோது, விஷ்ணு அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார், மேலும் அவரது தந்தை கடைசியாக ஜூலை 24 அன்று தொலைபேசியில் அவருடன் பேசினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விஷ்ணு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விஷ்ணுவின் மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உமாவை குரோம்பேட்டையில் உள்ள காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பூட்டானில் இருந்து வந்த உமாவின் கணவர் போலீசாரின் ஒப்புதலோடு உமாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.