TET காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

Author: Rajesh
13 April 2022, 4:05 pm

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிப்பு செய்திட இந்த அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

  • DD Neelakandan viral video ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!