போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதா? திமுகவின் பாசிச நடவடிக்கை… வானதி சீனிவாசன் கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 6:59 pm

போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதா? திமுகவின் பாசிச நடவடிக்கை… வானதி சீனிவாசன் கண்டனம்!!!

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகபப்டுத்த நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 19.24 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வானத்து சீனிவாசன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது, புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கடந்த பல மாதங்களாகப் போராடி வரும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட மக்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவிவிட்டு கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் சிப்காட் தொழில் பூங்காவுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து அறவழியில் போராடிய விவசாயிகளை திமுக அரசு கைது செய்தது. அவர்களில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மண்ணுரிமைக்காகப் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு திமுக அரசுதான்.

எதிர்க்கட்சியாக இருந்த போது அனைத்து திட்டங்களையும் கடுமையாக எதிர்த்து, அதற்கு எதிராக போராட்டங்களை நடத்திய திமுக, இன்று ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு, தடியடி, குண்டர் சட்டத்தில் கைது என அடக்குமுறையை கையாண்டு வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 285

    0

    0