அண்டை மாநிலத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நடைமுறைக்கு வருகிறதா? வி.சி.க எம்பி கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 4:56 pm

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது.

அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குறிப்பிட்ட கோயில்களில் ஆகாமல் விதிகள் தெரிந்திருந்தால் போதும் என அறநிலையத்துறை விளக்கமளித்ததன் அடிப்படையில், ஆகம விதிகள் தெரிந்து அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருப்பதைப் போல புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றும் விசிக எம்பி ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இருப்பதைப் போல இங்கும் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த துறையின் கீழ் 231 திருக்கோவில்கள் உள்ளன.

அறங்காவலர் குழுக்கள் மூலமாக நிர்வகிக்கும் இந்த திருக்கோயில்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலே 1970ம் ஆண்டிலேயே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கலைஞர் கருணாநிதி அவர்களால் இயற்றப்பட்டது.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த வழக்கில், அர்ச்சகர் நியமனங்கள் சாதி, பிறப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் ஆகமங்கள் மற்றும் சடங்குகளில் பயிற்சி இருந்தால் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்க எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதுச்சேரியிலும் அதே போல ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் இருப்பதை போல அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி ஒன்றையும் நிறுவ வேண்டும். அதனை நிறுவுவதற்கு காலதாமதம் ஆகும் என்றால் அதுவரை தமிழ்நாட்டில் இருக்கின்ற பயிற்சி பள்ளியில், புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞர்கள் படிப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1301

    1

    0