முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறு : நள்ளிரவில் பாஜக பிரமுகர் கைது… காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினரால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2022, 2:36 pm
நெல்லை : கடையநல்லூர் அருகே முதல்வர், அவரது மனைவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்த விழா ஒன்றில் திமுக எம்.பி ஆ ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜகவின் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து என்பவர், முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவரது மனைவி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து திமுகவினர் சொக்கம்பட்டி போலீசாரிடம் புகாரளித்த நிலையில், போலீசார் பேச்சிமுத்துவை நள்ளிரவில் கைது செய்தனர். இதுகுறித்து அறிந்த பாஜகவினர் சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.