அமைச்சர் ரோஜா குறித்து அவதூறு.. பண்டாரு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் : ஆதரவு கொடுத்த பாஜக பிரமுகர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 4:14 pm

அமைச்சர் ரோஜா குறித்து அவதூறு.. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் : ஆதரவு கொடுத்த பாஜக பிரமுகர்!!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் நடிகை ரோஜா சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்திருப்பதாக கூறியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நடிகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, தெலுங்கு தெசம் கட்சி தலைவர்கள் தன்னை இழிவான வார்த்தைகளால் அவமதிப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் தன்னை இழிவாக பேசியவர்கள் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார். தன்னை பற்றி அவதூறாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடு ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் தனது சொந்த கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ரோஜாவுக்கு பெரியளவில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.

ரோஜாவுக்க்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர். வலுவான பதிலடி கொடுக்கும் பெண் அமைச்சர்களோ அல்லது அமைச்சர்களோ யாரும் ரோஜாவை பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் அக்கட்சிக்க்குள் விவாதப் பொருளாக மாறி உள்ளது. பெண் அமைச்சர்கள் விடாத ரஜினி, தானேடி வனிதா, உஷாஸ்ரீ சரண் ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் சொந்த கட்சிக்குள்ளேயே ரோஜா ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு இன்று தெரிவித்துள்ள கருத்தில், “பெண் அமைச்சர் குறித்த பண்டாருவின் கருத்துகள் அவரின் பாதுகாப்பு மற்றும் சீரழிவுக்கு வழிவகுக்கும். பண்டாரு ஒரு மனிதனாக தோன்றி விட்டார். அவர், அமைச்சர் ரோஜாவிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பிரதமர் மோடி மகளிருக்கு பல்வேறு இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தாலும், பண்டாரு போன்றவர்கள் இதுபோன்ற நேரத்தில் பெண்களுக்கு எதிராக அவர்களை இழிவுபடுத்தி பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

பெண்களை மதிப்பவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்வது தனது பிறப்புரிமை என்று பண்டாரு நினைக்கிறாரா என தெரியவில்லை. நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

விவாதத்தின் போதுகூட ஒரு பெண்ணை இவ்வளவு அநாகரிகமாக பேசுவது மிகவும் கண்டிக்கக் கூடியது. ஆகவே பண்டாரு உடனடியாக அமைச்சர் ரோஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை போராடுவேன்” என தெரிவித்தார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…