மத்திய அரசின் குட்புக்கில் இடம்பிடித்த அண்ணாமலை… கூடுதல் பொறுப்பு வழங்கிய ஜேபி நட்டா.. பாஜக போட்ட மாஸ்டர் பிளான்..!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 11:30 am

தமிழக பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி சிறப்பானதாக இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். திமுக அரசின் ஊழல்முறைகேடுகள் மற்றும் குறைகளை புள்ளிவிபரங்களோடு எடுத்துரைத்து வருவதால், தமிழகத்தை ஆளும்கட்சியினருக்கு சிம்ம சொற்பனமாக திகழ்ந்து வருகிறார்.

Annamalai - Updatenews360

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்பிக்களையாவது பாஜக சார்பில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடகா தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கர்நாடகா பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

Annamalai - Updatenews360

தமிழகத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகளில் பாஜக மேலிடத்திற்கு ஏற்பட்ட திருப்தியினாலும், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அண்ணாமலைக்கு இருப்பதாலும், அவரை இந்தப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில கேடரான அண்ணாமலை, அங்கு பயிற்சி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கிய அவர், சீனியர் எஸ்.பி.யாகப் பதவியில் இருந்தபோது 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி