பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்.,6ம் தேதி தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா குறித்து பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இருதரப்பினரும் பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை. இதையடுத்து, பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பை இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜக தேசிய தலைமை இதனை விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதனிடையே, அதிமுக – பாஜக முறிவுக்கு பின் முதல்முறையாக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டது பாஜக தேசிய தலைமைக்கு அதிருப்தியையே ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து, நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை வந்தார். அவர் டெல்லி சென்றதால், தமிழக பாஜக ஆலோசனைக் கூட்டம் 5ம் தேதியும், அடுத்த கட்ட நடைபயணம் 6ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சுக்குழாய் நோய்த் தொற்று காரணமாக 5 நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால், அக்.,6ம் தேதி தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக்., 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும், திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்று திரும்பிய பிறகு மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.