தலைநகரை உலுக்கிய பேய் மழை… 2 மணி நேரத்தில் மூழ்கிய சாலைகள் : வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 8:45 am

தலைநகரை உலுக்கிய பேய் மழை… 2 மணி நேரத்தில் மூழ்கிய சாலைகள் : வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த மிக கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை கொட்டியது என்ற விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், “நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னையில் பெய்த மழை அளவு: அதிகபட்சமாக கொளத்தூர் – 156.0, திருவிக நகர் – 149.0, அம்பத்தூர் – 147.3, புழல் – 114.9. கோடம்பாக்கம் – 116.1, மலர் காலனி – 138.0, கத்திவாக்கம் – 107.4, அத்யா சுற்றுச்சூழல் பூங்கா – 113.9, ஆலந்தூர் ஜிசிசி – 120.9. மதுரவாயல் ஜிசிசி – 119.4. தேனாம்பேட்டை ஜிசிசி – 104.7 நுங்கம்பாக்கம் – 79.4, மீனம்பாக்கம் – 97, எண்ணூர் துறைமுகம் – 56, புழல் – 118.5, திரூர் (திருவள்ளூர்) – 70.0, YMCA நந்தனம் – 103.0, அண்ணா பல்கலைக்கழகம் – 106.5, செம்பரம்பாக்கம் – 47.5, தரமணி – 84.0, நியாட் பள்ளிக்கரணை – 61.2, கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்) – 95.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) – 70.5, VIT சென்னை AWS (செங்கல்பட்டு) – 81.0 மிமீ அளவில் மழை பெய்து உள்ளது. அதேபோல், நேற்று இரவு 8.30 மணி வரை 24 மணி நேரம் பெய்த மழை அளவை பொறுத்தவரை, “மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 08 அண்ணாநகர்- தலா 6; மண்டலம் 12 மீனம்பாக்கம், மண்டலம் 06 திரு.வி.க.நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், தொண்டைர்பேட்டை – தலா 5; அண்ணாநகர், மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 05 ராயபுரம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர், மண்டலம் 06 டி65 கொளத்தூர், சென்னை (என்), சிடி மருத்துவமனை தொண்டியார்பேட்டை – தலா 4 மிமீ மழை பெய்து உள்ளது.

சென்னை, மண்டலம் 03 புழல், கோடம்பாக்கம், எண்ணூர், ராயபுரம், மண்டலம் 04 தொண்டியார்பேட்டை, மண்டலம் 03 மாதவரம், திரு-வி-கா நகர், மண்டலம் 01 கத்திவாக்கம், டிஜிபி அலுவலகம், திருவொற்றியூர், மாதவரம், மண்டலம் 10, U41 கோடம்பாக்கம், மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 02 D15 மணலி, மண்டலம் 13 U39 அடையாறு, அம்பத்தூர், மண்டலம் 01 திருவொற்றியூர் தலா 3 மிமீ மழை கொட்டி இருக்கிறது.

காஞ்சிபுரம்: குன்றத்தூர் – 4; திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி – 5; பொன்னேரி, சோழவரம் – தலா 4; புழல், ரெட் ஹில்ஸ், ஆவடி, உத்திரமேரூர், ஊத்துக்கோட்டை, கொரட்டூர், திரூர், திருவள்ளூர் தலா 3. மழை பெய்து இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!