ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்… தமிழகத்தில் மெல்ல மெல்ல பரவுகிறதா..? உஷாராகும் சுகாதாரத்துறை..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 11:50 am

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த ஒரு வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 2 வாரத்தில்
37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு தனிவார்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்