நாய் கறி உண்பவர்கள் என இழிவுப்படுத்துவதா? ஆர்எஸ் பாரதிக்கு ஆளுநர் ஆர்என் ரவி கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2023, 4:52 pm
நாய் கறி உண்பவர்கள் என இழிவுப்படுத்துவதா? ஆர்எஸ் பாரதிக்கு ஆளுநர் ஆர்என் ரவி கண்டனம்!!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகா இன மக்கள் குறித்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இழிவாகப் பேசியதாகக் கூறி, அவரது பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு.பாரதியை வலியுறுத்துகிறேன்.” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.