அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் தனக்கு மகிழ்ச்சி என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை ஐயப்பன் தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பின சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாமு அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பரசன், காஞ்சிபுரத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலேயே, அதிக வாக்குகளை கொடுத்து வெற்றி பெற வைத்தது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தான்.
இந்த தொகுதியில் அண்ணன் டி ஆர் பாலு நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அந்த அளவுக்கு இந்த தொகுதியில் இளைஞரணி மற்றும் மாணவர் அணியில் திறமையான உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரானால் அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பரசன், திமுக இல்லாத ஒரு சந்து கூட தமிழ்நாட்டில் கிடையாது. அனைத்து இடங்களிலும் திமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது. இவ்வளவு பெரிய கட்சிக்கே இந்த நிலைமை இருக்கின்றபோதில், தற்போது தனக்குக் கூட்டம் கூடுகிறது என்று நினைத்து சில நடிகர்கள் முதலமைச்சராகி விட நினைக்கிறார்கள்.
சினிமாவில் இருந்து ஒருவர் முதல்வராவது எல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு போய்விட்டது. இது தெரியாமல் எதிர்காலத்தில் முதல்வராகும் கனவோடு இருப்பவர்களின் கனவுகளை எல்லாம் பொய்யாக்க வேண்டும் என்றால் நம் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.