தேவநாதன் என்ன தப்பு செஞ்சாரு… முதலீட்டாளர்களுக்கு நீதி வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 6:24 pm

மயிலாப்பூர் சிட் ஃபண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி பொது மக்களிடம் பணம் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றியதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர்சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்த சென்னைக்கு காவல்துறையினர் காவல்துறைவாகனத்தில் சென்னை அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட தேவநாதன் இந்திய கட்சி கல்வி முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியாக இணைந்து போட்டியிட்டு தோல்வியை கண்டவர்.

இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது x தளப்பக்கத்தில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், திரு தேவநாதன் யாதவ் அவர்கள், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.

தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 286

    0

    0