‘ஒரு முன்ஜாமீன் வாங்கிருங்க’.. குற்றவாளிக்கு ஆதரவாக தேவர்குளம் காவல்நிலைய எஸ்ஐ ; வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!!!

Author: Babu Lakshmanan
9 May 2024, 7:43 pm

நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், காவலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்தில் தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்து தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது மட்டும் பல்வேறு வழக்குகளை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பதிவு செய்வதாகவும், கடை வியாபாரிகளையும், வாகனம் வைத்திருப்பவர்களையும் குறி வைத்து பொய் வழக்குப் பதிவு செய்து தொழில் செய்ய விடாமல் பிரச்சினை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் படிக்க: சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு… போராடினால் தடியடி நடத்துவதா..? காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்…!!

இதனை கண்டித்து தேவர்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். இது குறித்து தகவலறிந்து ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி கலைந்து போகக் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இத குறித்து தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

https://twitter.com/i/status/1788547091004051635

இந்த நிலையில், தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ பவுல்ராஜ் அப்பகுதி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், அவர் இதற்கு முன் பணியாற்றிய போலீஸ்நிலையத்தில் குற்றவாளியை முன்ஜாமீன் எடுக்க சொல்லி பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எஸ்ஐ பவுல்ராஜ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 719

    0

    0