தம்பி நல்லா இருக்கீங்களா? போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட Swiggy ஊழியரிடம் நலம் விசாரித்த டிஜிபி : பிணையில் வெளியே வந்த காவலர்!!

கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:”நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே அடைத்து வருகிறேன்.

இந்த சூழலில்,நேஷனல் மாடல் பள்ளி வாகனம் ஒன்று ஃபன்மால் அருகே ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதன்பின்னர்,நான் அந்த வண்டியை நிறுத்த முயன்று நியாயம் கேட்டேன்.ஆனால்,உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்?,மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்று கேட்டு,சம்மந்தப்பட்ட பள்ளி வாகனத்தை அனுப்பி வைத்து விட்டு,என் செல்போன்,ஹெட்போன் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்று விட்டார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும்,காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சொந்த ஜாமீனில் காவலர் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாதிக்கப்பட்ட ஊழியர் மோகனசுந்தரத்திடம் டிஜிபி சைலேந்திரபாபு உடல் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் மோகனசுந்தரத்திடம் டிஜிபி பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

23 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

23 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.