ஓய்வு பெறுகிறார் டிஜிபி சைலேந்திரபாபு… அடுத்த டிஜிபி யார்? 10 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்த உயரதிகாரி!!
Author: Udayachandran RadhaKrishnan21 June 2023, 9:59 pm
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது.
எனவே, இந்த இருவர் இடத்திலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது. அந்தவகையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.
அதாவது, தலைமை செயலாளரும் விரைவில் பணிஓய்வு பெறுவதால், அநேகமாக இவரை, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி நியமனம் செய்யலாம் என்றார்கள்.. பிறகு, டிஎன்பிஎஸ்சி. சேர்மன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று சொன்னார்கள்.. ஆனால், எதையுமே தலைமை செயலாளர் விரும்பவில்லையாம்.
இந்நிலையில், புதிதாக சட்டம் – ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது… புதிய டிஜிபிக்கான லிஸ்ட் ஏற்கனவே டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம்தான் நாளை நடக்கிறது.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
திய சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் இருக்கிறார்களாம்.. இந்த 10 பேரில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளனர்.