தருமபுரம் ஆதினம் போல மதுரை ஆதினம் பல்லக்கில் போவாரா..? சீமான் கேள்வி… சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி என குற்றச்சாட்டு.!!
Author: Babu Lakshmanan5 May 2022, 6:09 pm
சென்னை : தருமபுரம் ஆதினத்தின் பட்டிண பிரவேசத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை – தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. பட்டிணப் பிரவேசம் என்பதே நான் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
மற்ற விழாக்களை நடத்திக் கொள்ளலாம். மதுரை ஆதீனமும், பொன்னம்பல அடிகளாரோ பல்லக்கில் போவார்களா..? நிச்சயம் போக மாட்டார்கள், என்றார்
இலங்கை தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக் கொண்டு இருக்கிறோம். அதை முறைப்படி கொண்டுபோய் சேர்ப்போம். தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது இலங்கை தமிழர்களுக்கு போய் சேரும் என்பதை உறுதி செய்ய வேண்டும். சிங்களர்களுக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்குப் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், என்றார்.
0
0