சிற்றுண்டி திட்டத்தை திமுக காப்பியடித்ததா? ஆதாரத்துடன் ஆளுநர் தமிழிசை சொன்ன விஷயம் : வைரலாகும் ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 8:06 pm
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார்.
இந்த நிலையில்,தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தன் டுவிட்டர் பக்கத்தில், 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது.
தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
National Education Policy by @PMOIndia is awesome & makes mandatory for all school children to get BREAK FAST along with Noon Meals as laid down guidelines. #NEP2020 emphasize education along with #Nutrition in schools/ Mother tongue priority & many good things.. @CMOTamilndu pic.twitter.com/8YSC3NxiCZ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 15, 2022
புதிய கல்வி கொள்கை திட்டம் குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் பேசி வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளதை எப்படியும் அனைத்து மாநிலங்களும் அறிந்திருக்க கூடிய விஷயம்தான். அதை தற்போது திமுக அரசு செயல்படுத்தியுள்ளது காப்பியடிக்கப்பட்டதாகவே கருத தோன்றுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.