எச்.ராஜா அண்ணாமலையை கேட்டு தான் பேசினாரா? கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 6:15 pm

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலை வகித்தார் இதில் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது நிதி போதுமான அளவுக்கு உள்ளதா என்பது குறித்தும் அரசு அதிகாரிகளோடு ஆய்வு செய்யப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று அந்த கட்சியின் கொடி வெளியீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம்
கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

நீட் GST உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் விஜயின் நிலைப்பாடு என்பதை தெரிவிக்க வேண்டும், இதுபோன்று இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் வெறும் கட்சியை அறிவித்துவிட்டு கொடியை வெளியிட்டு விட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் பத்தாது

எல்லோரும் தான் தமிழ் பற்று தேச பற்று உள்ளது, எனக்கும் தான் தேசிய பற்று தமிழ் பற்று உள்ளது, அவரது கொள்கை என்பதை விவரிக்க வேண்டும், விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்திய வைத்து நான் எந்த கருத்தும் கூற முடியாது,

தனியாக கட்சி நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது பாட்டால் தான் விஜய்க்கு தெரியும், விஜயும் பட்டு தெரிந்து கொள்வார்,

முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்,உயிர் இழப்புகள் ஏற்படும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து

தலித் முதலமைச்சராக பாஜக சார்பில் அதிக அளவு வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால் பாஜக தலித் முதலமைச்சரை உருவாக்குவோம் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் எச். ராஜா அண்ணாமலையை கேட்டு சொல்கிறாரா? பேசுகிறாரா என்பது தெரியவில்லை என்றார்

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாது நடந்த பிறகு விசாரணையை விரைந்து நடத்தி குற்றவாளி கைது செய்து தண்டனை இதனால் வாங்கித் தரலாம் இதற்கு சமுதாய மாற்றம் இருந்தால் மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திலும் பெண்களை மதிப்பதற்கு ஆண்களுக்கு சிறு வயதிலிருந்து கற்றுத் தர வேண்டும் அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் அரசாங்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது

நடிகர் சீமான் திருச்சி எஸ் பி வருண் ஆகியோரது பிரச்சனை குறித்து பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், நடிகர் சீமான் அரசியல் கருத்துக்களை பேச வேண்டுமே தவிர தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை குறித்தும் உங்களுடைய பிரச்சனையை குறித்தும் பேசுவது தவறு

சீமான் இவ்வாறு பேசுவது அரசியலுக்கு அழகல்ல, வக்பு வாரிய சட்டத்திற்கு பாராளுமன்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முதல் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது இன்னமும் இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தப்படும் அதில் எடுக்க முடிவு பொறுத்து இந்த சட்டம் நிறைவேறுவது குறித்து தெரியவரும் என்னை பொருத்தவரை இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு கிடையாது அதற்குண்டான பலமும் மத்திய அரசுக்கு கிடையாது.

கருணாநிதி காயின் வெளிவிட்டு விழா தொடர்பான சர்ச்சை குறித்து பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மேல் என்பதுதான் எனது பதில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலுக்குப் பிறகு 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கிவிட்டது பணிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது எந்தெந்த பணிகள் நடைபெறுவது எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினருக்கு இது குறித்து தெரியாமல் உள்ளது எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இனி வரும் காலங்களில் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது என்றார்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!