பொதுமேடையில் நேருவை களங்கப்படுத்தினாரா கே.எஸ் அழகிரி? காங்கிரஸ் மேலிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2023, 8:47 pm
சமீபத்தில், சென்னை சத்தியமூர்த்திபவனில், ‘அரசியல் அமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ பிரசாரத்தை முன்னெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், அழகிரி பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: நாடு விடுதலை பெற்றதும், யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, காந்தி வழியை பின்பற்றுபவர் தான் பிரதமராக தேர்வாவார் என, காங்கிரஸ் நம்பியது. ஆனால், சர்தார் வல்லபாய் படேலுக்கும், மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
தேச நலன் கருதி, நேருவை பிரதமராக தேர்வு செய்தார் காந்தி. பின் படேலிடம் பேசி, அவருடைய ஒப்புதலையும் பெற…நேரு பிரதமரான பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பொதுத்துறை வளர்ச்சி பெற்றது. நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பியாக நேரு திகழ்ந்தார். இவ்வாறு, அழகிரி பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
தன் அரசியல் வாழ்க்கை குறித்து, காந்திக்கு, நேரு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவலை தான், அழகிரி தன் பேச்சில் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
நேருவை தனிப்பட்ட முறையில் ஏதும் பேசவில்லை எனவும் அவரது தனிப்பட்ட குணங்களை விமர்சித்து, அழகிரி பேசினார். கட்சி மேடையில், நேருவின் குடும்பத்தை களங்கப்படுத்தியதால். அக்கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன்’ என, குறிப்பிட்டுள்ளார்.
மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ்குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர், கூட்டத்தில் என்ன நடந்தது;…அழகிரி பேச்சின் அர்த்தம் என்ன என்பதை, சில மாவட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு, விபரம் கேட்டு வருகின்றனர்.