உங்கப்பன் வீட்டு சொத்தையா கேட்டோம்..? உன்கிட்ட கேட்பது அவமானமா இருக்கு : CM ஸ்டாலின் மீது ராமதாஸ் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 8:26 pm

உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி,

உன்னிடம் நான் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, உன்னை கோட்டையில் நான் சந்திக்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உன்னிடம் கேட்டால் நீ மத்திய அரசை காட்டுகிறாய் பின்னர் நீ ஏன் முதலமைச்சர், தமிழகத்தில் ஏதோ நடக்கப்போகிறது நடத்திக் காட்டப் போகிறோம், அண்டம் கிடு கிடு என நடுங்கப் போகிறது தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுவையில்

கேரள மாநிலத்தில் ஈழவர்கள் என்ற சாதியினரை உயர்ந்த சாதியினரை 20 அடி தூரத்துல் கண்டால் குளித்து விட்டு வரக்கூடிய சூழல் இருந்தது அதெல்லாம் மாறி முதலமைச்சராக வரக்கூடிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பீர் பிராந்தி போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க தான் போராடி வருவதாகவும்,

*10.5 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 35 நிமிடங்கள் பாடமெடுத்தேன், ஊமை ஜனங்கள் பேசப் போகிறார்கள், ஆட்சியில் இருப்பவர்களின் குடை சாய, பதவியை விட்டு ஓட, இந்த ஊமை ஜனங்களுக்கு தைரியம் வர, அவர்கள் பேசுவார்கள் இந்த நாடு பார்க்கும் இந்த நாடு தாங்காது, உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி,

உன்னிடம் நான் பத்து புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, உன்னை கோட்டையில் நான் சந்திக்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது,

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உன்னிடம் கேட்டால் நீ மத்திய அரசை காட்டுகிறாய் பின்னர் நீ ஏன் முதலமைச்சர், தமிழகத்தில் ஏதோ நடக்கப்போகிறது நடத்திக் காட்டப் போகிறோம், அண்டம் கிடு கிடு என நடுங்கப் போகிறது தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 616

    0

    0