சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்காக தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி திமுக பணம் பறிக்கிறது என்று அண்ணாமலை கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா?
அண்ணாமலையின் செல்லப்பிள்ளை, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவராக இருக்கக்கூடிய அலிஷா அப்துல்லாஹ் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்களை சந்தித்து பார்முலா ரேஸ் குறித்து உரையாடி ஆதரவு தெரிவிக்கின்றார். ஆனால், அதே கட்சியின் மாநில தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் அதை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார். //தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது// என்று கூறும் அண்ணாமலை, மோடி கபடி லீக் என்ற பெயரில் அமர்பிரசாத் ரெட்டி செய்த ஊழல், முறைகேடுகளும் பொதுநல ஆசைகளுக்காக செய்யப்பட்டதா? அமர் பிரசாத் ரெட்டி மீது ’கை நீட்டி’ எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாடு பாஜகவினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா? இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது?
விளையாட்டு துறையில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்த சாக்ஷி மாலிக்கும், வினேஷ் போகாட்டும் – இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர். ஆனாலும், பிரிஜ் பூஷன் சிங்கை காப்பாற்ற பாஜக ஏன் துணை நின்றது? பொது நல ஆசைகளுக்காகவா?அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி காண்பித்த கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி பெருமிதம் அடைந்தபோது தெரியவில்லையா அது தமிழ்நாடு அரசு நடத்திய நிகழ்ச்சி என்று.
தற்போது ஃபார்முலா ரேசை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்திவிட்டால் மாநில அரசின் விளையாட்டு துறை பெயர் வாங்கிவிடும் என்பதற்காக அபாண்டமாக குற்றம் சாட்டுவது சரியா?
குற்றம் சாட்டுவதை விட தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதற்கு தகுதி இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.