நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம்? பதறிய நிர்வாகிகள் : தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டும் சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 7:50 pm

நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம்? பதறிய நிர்வாகிகள் : தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டும் சீமான்!!

நாம் தமிழர் கட்சிக்கு இந்த ஆண்டு சிக்கல் மேல் சிக்கலாகவே உள்ளது. குறிப்பாக என்ஐஏ சோதனையால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடந்தது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

இதையடுத்து இன்னொரு பிரச்சனையாக நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீமான் சற்று குழம்பியே போயிருந்தார்.

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே திட்டமிட்டே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என 6 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.

சின்னத்தை பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் அதனை சேர்ப்பது கொண்டு என்பது ரொம்ப எளிதானது. ஆனால், நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கரும்பு விவசாயி சின்ன கோரி நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர். மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிட மனு அளித்துள்ளார். சீமான் எழுதிய கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.

சீமான் கோரிக்கை ஏற்று கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை கிடைக்காவிடில் இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ