பட்டாசு வெடிவிபத்துகளால் தொடரும் உயிர்பலி… பட்டாசு கடையில் நிகழ்ந்த தீவிபத்தில் உடல்கருகி ஒருவர் பலி..!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 4:22 pm

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் அர்ஜுன் பட்டாசு கடை என்ற கடை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக குடியிருப்பு பகுதிகளில் இந்தப் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இதில், தீவிபத்தில் சிக்கி ஒருவர் உடல்கருகி உயிரிழந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்பதால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து தற்போது பட்டாசு கடைகள் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு கடைக்குள் யாரும் உள்ளார்களா..? என்பது குறித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதியில் அருகே பட்டாசு கடை இருந்ததால், மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்களும் வெளியே ஓடினர். மேலும், பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 764

    0

    0