அமைச்சர் உதயநிதியுடன் ஆய்வில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. பாஜக எழுப்பிய கேள்வி.. வெடித்தது சர்ச்சை!!
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பெருமழை கொட்டியது. இப்பெருமழையால் குளங்கள் நிரம்பின; அணைகள் நிரம்பின; உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியது.
இப்பெருவெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகின. இம்மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தமது சொந்த ஊரான புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தத்தளித்து வருவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது.
கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.
மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் பணியாற்றினார். மேலும் “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்” எனவும் சமூக வலைதளங்களில் படங்களும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜகவினர் “உதயநிதி வச்சு படம் பண்ணினால், இவ்ளோ அதிகாரம் யார் கொடுத்தார்கள்?” என மாரி செல்வராஜ் பேட்டிக்கு எதிராக கேள்வி எழுப்பினர். அதேபோல “Dear Mr. @Udhaystalin sir can you please explain what’s the role for Mari Selvaraj here? Is he a IAS, minister or govt official? Why is he with you when you’re going for official government work? எனவும் கேள்வி கேட்டிருந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நிற்பது குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு திமுகவினரும் சமூக வலைதளங்களில் பதிலடியாக “மாரி செல்வராஜ் உதயநிதி கூட நின்னு உதவி செய்யறது கஷ்டமா இருக்கா இல்ல மாரி செல்வராஜ் உதவி பன்றது புடிக்கலையா” என்றும் “சென்னை நடிகர்கள் சென்னை மக்களுக்கு உதவுறது சரின்னா, தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலி மக்களுக்கு மாரி செல்வராஜ் உதவுறது மட்டும் எப்படி தவறாகும்?” எனவும் பதில் எழுப்புகின்றனர்.
திமுகவின் கவிஞர் சல்மா தமது எக்ஸ் பக்கத்தில், மாரி செல்வராஜ் தன் கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காக களத்தில் நிற்பதை பார்த்து கேலி செய்கிறார்கள்.
ஓராயிரம் மக்கள் ,என்ஜிஓக்கள் தனியாகவும், அரசோடும், கட்சியோடும் இணைந்து கொண்டு உதவுகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்னை? என பதில் கொடுத்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.