திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கும் திருமணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 2021- 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறணாளியாக இருப்பின், திருக்கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும், திருக்கோமிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து சார்நிலை
அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு, தற்போது மேற்படி அறிவிப்பு அனைத்து
திருக்கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள். அதோடு, இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் தம்பதிக்கு புத்தாடைகள் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.