கடலூர் திமுக எம்எல்ஏ மீது ஒழுங்கு நடவடிக்கை : கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் தற்காலிகமாக நீக்க துரைமுருகன் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 1:13 pm

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் அய்யப்பன் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும்,கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி,திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…