ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து 2 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் : கட்சி தாவல் தடை சட்டம் மூலம் ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 7:13 pm

கட்சித் தாவல் தடைச் சட்டம் மூலம் 2 எம்எல்ஏக்கள் பதவி நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல் மந்திரியாக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ம் தேதி நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.

இதனால் அவரது கட்சியின் சம்பாய் சோரன் முதல் மந்திரியாக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது.

இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜ.கவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இதற்கிடையே, ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் நடத்தப்பட்டது. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால், ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.வான லோபின் ஹெம்ப்ரோம் மற்றும் காங்கிரஸ் எம் எல் ஏவான ஜெய் பிரகாஷ் பாய் படேல் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஜெய் பிரகாஷ் பாய் படேல் பாஜ்கவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!