திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம் : துரைமுருகன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2023, 5:02 pm
கடந்த வருடம் திமுக-வில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 72 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சமீபத்தில் திமுக மாவட்ட செயலாளர்களோடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த கூட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தங்கள் மாவட்டங்களில் கட்சிப்பணியை பொறுப்புடன் ஆற்றவேண்டும் இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மிசா பாண்டியன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக” திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலியின் திமுக மத்திய மாவட்ட செயலாளரான அப்துல் வகாப் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுகவின் புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சராக மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.