கமலாலயத்தை நோக்கி படையெடுக்கும் மாவட்ட தலைவர்கள் : முக்கிய முடிவுகளை அறிவிக்கும் அண்ணாமலை?!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 5:04 pm

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. மாலை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்.

இதில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.

அண்மையில் காயத்ரி ரகுராம், சூர்யா சிவா சஸ்பெண்ட் மற்றும் பாஜக கட்சி விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

  • Salary in cinema 25 வருஷம் சினிமால இருந்தா சம்பளம் கிடைக்காது, ஆனால்?- காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ