தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு : மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 10:04 am

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

குறிப்பாக ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

ஆன்லைன் மற்றும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 352

    0

    0